Trending Topic

We bring you Articles, Poems, Stories, Inspirational Quotes and Speeches

Thursday, September 14, 2017

என்.எம். அமீனுக்கு விருது வழங்கி கௌரவிப்பு

கலையும் இலக்கியமும் சாந்தமும் ஒழுக்கமும் நிறைந்த முழுமையான சிறந்த மனிதர்களைக் கொண்ட தேசத்தை கட்டியெழுப்புவோம் என்னும் தொனிப்பொருளின் கீழ் கலை இலக்கியம் மற்றும் சமூக சேவையில் ஈடுபட்டுவருபவர்களுக்கு தெஹிவளை பிரதேச செயலகத்தினால் கௌரவ விருது வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் பன்முக ஆளுமை கொண்ட நவமணி பத்திரிகை ஆசிரியரும், முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீ லங்கா மற்றும் முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவருமான என்.எம் அமீன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

தெஹிவளை ஜயசிங்க மண்டபத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (12/09/2017) தெஹிவளை பிரதேச செயலாளர் நளினி பாலசுப்ரமணியம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கொழும்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கரா கலந்து கொண்டதுடன் இலக்கியவாதிகள், பாடசாலை மாணவர்கள், தெஹிவளை பிரதேச மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.



No comments: