![]() |
01. கேள்வி: பல்லின மக்கள் வாழும் இலங்கையில் சிறுபான்மை சமூகமாக வாழும் முஸ்லிம்கள், பெரும்பான்மை சமூகத்துடன் மற்றைய ஏனைய சமூகங்களுடன் ஒன்றிணைந்து வாழ்வது எப்படி?
பதில்: ஒன்றிணைந்து வாழ்தல் என்ற சொற்பிரயோகத்தில் ஒரு குழப்பநிலை காணப்படுவதாகவே நான் நினைகின்றேன். நீங்கள் அனைவரும் இலங்கையின் பிரஜைகள். இது உங்களுடைய நாடு. மத ரீதியாக சிறுபான்மையினராக இருந்தாலும் இது உங்கள் நாடு. இலங்கை கலாசாரத்திற்குள் வாழும் நீங்கள் இலங்கை முஸ்லிம்கள்.
பரந்த இலங்கைக்குள் ஒன்றிணைத்து வாழ்தல் போன்று கருத்துப்பட எப்பொழுதும் பேசுவதன் மூலம் இது உமது சமூகமில்லை, இது பெரும்பன்மையினரின் சமூகம் மாத்திரம் என்ற உணர்வை எற்படுத்துகின்றது. ஆனால் இந்த சமூகம் அனைவரினதும். அனைவரும் நாட்டின் சமஉரிமை கொண்ட பிரஜைகள். இவ்வாறே இது அமைய வேண்டும் என நான் நினைக்கின்றேன்.
02. கேள்வி: பல்லின சமூகத்தில் வாழும் போது முஸ்லிம்களின் அடையாளத்தை பேணி வாழ்வது சவால்மிக்கது. ஒன்றிணைந்து வாழும் போது எவ்வாறான அடையாளங்களை விட்டுகொடுக்க முடியும் எவ்வாறான அடையாளங்களை விட்டுகொடுக்க முடியாது?
பதில்: நாம் ஒன்றிணைத்து வாழ்தல் மற்றும் எமது அடையாளங்களை பேணுதல் என்ற பத பிரயோகத்தையே சவாலாக கொள்ள வேண்டும். இங்கு முக்கிய விடயம் என்னவென்றால் இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகள் என்ன என்பதனை அறிந்துகொள்ள வேண்டும்.
மத சுதந்திரம் மற்றும் மனச்சாட்சிப்படி வாழ்தல் என்பன அனைத்து சமூகங்களிலும் அடிப்படையானதாகும். இவை இங்கும் பேணப்படுகின்றன. அதாவது அகீதா மற்றும் வழிபாடுகள் என்பனவாகும். அதற்கு மேலதிகமாக நாம் மதிக்க வேண்டிய சில கடமைகள் மற்றும் தடை செய்யப்பட்ட விடயங்களும் காணப்படுகின்றன.
உதாரணமாக மது அருந்தாமல் இருத்தல், பன்றி இறைச்சி சாப்பிடாமல் தவிந்து கொள்ளுதல் மற்றும் இஸ்லாமிய ஆடைமுரையை பேணுதல் போன்றனவாகும்.
இவைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இதனை அடுத்த சமூகத்தினருக்கு சொல்ல வேண்டியது முஸ்லிம்களின் பொறுப்பு. அதே போன்று சமூகத்தில் ஈடுபடும் போது எமது கலாசாரம் இலங்கையின் கலசாரம், எமது மொழி இலங்கையில் காணப்படுகின்ற மொழிகள் மற்றும் ஏனைய அனைத்து பிரஜைகளை போன்று நாமும் இந்த நட்டுக்குரியவர்கள் என்பதை ஏற்றுகொள்வது முக்கியமாகும்.
ஆகவே நீங்கள் இலங்கையர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும். மாறாக நீங்கள் முஸ்லிம்கள் என்பதற்காக எந்தவகையிலும் கவலைப்பாடல் ஆகாது.
3. கேள்வி: ஹிஜாப் அணிவது போன்ற இஸ்லாமிய அடையாளங்களை முஸ்லிம் அல்லாதவர்கள் அவர்களுக்கு எதிரான விடயமாக நோக்குகின்றனர். இது ஒரு முரண்பாடான நிலையை தோற்றுவித்துள்ளது. இது தொடர்பாக உங்கள் நிலைப்பாடு என்ன?
பதில்: இதில் எந்த முரண்பாடும் இல்லை. அதனை கொள்கைகளின் முரண்பாடாக நான் காணவில்லை மாறாக அது எண்ணங்களில் உள்ள முரண்பாடாகவே நான் பார்க்கின்றேன். இங்கிருந்தே நாம் கலந்துரையாடலுக்கு பிரவேசிக்க வேண்டுமென நான் நினைக்கிறேன்.
அதாவது முஸ்லிம் என்றால் என்ன என்ற அர்த்ததத்தை தேட வேண்டும். ஏனெனில் ஹிஜாப் என்பது ஒரு கடமை. ஆனால் ஒரு பெண்ணுக்கு ஹிஜாப் அணிய வற்புறுத்துவது இஸ்லாத்துக்கு முரணானதாகும் அதே போன்று, அதனை அணிய வேண்டாமென தடுப்பதும் மனித உரிமைகளுக்கு முரணானதாகும். ஆகவே ஹிஜாப் அணிவதும் அணியாமல் இருப்பதும் அவரவர் சுத்தந்திரமாக காணப்பட வேண்டும். ஆனால் புர்கா அணிவது தொடர்பில் மாறுபட்ட கருத்துக்கள் காணப்படுகின்றன.ஆகவே அதனை நாம் ஏனைய சமூகத்தினருக்கு எடுத்துச் சொல்லும் அதே நேரம் இது தொடர்பான கலந்துரையாடலை முஸ்லிம்களாகிய எமக்குள் ஏற்படுத்த வேண்டும்.
04. கேள்வி: முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் ஒன்று சேர்ந்து பொதுவாக பணியாற்றக்கூடிய ஒரு வெளியை எவ்வாறு அடையாளப்படுத்தலாம்?
பதில்: இஸ்லாத்திற்கு அப்பாற்பட்ட பொது விடயங்கள் தொடர்பாக இஸ்லாமிய இயக்கங்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். இயங்கங்களின் உறுப்பினர்கள் சமூகத்தின் பொது பிரச்சினைகள் தொடர்பாக அறிவுறுத்தப்பட வேண்டும். சமூக நீதி கல்வி போன்றன. முஸ்லிம்கள் பங்குகொள்ளாத விடயங்களில் முஸ்லிம்களை பன்குபற்றச் செய்தல் வேண்டும்.
கல்வித் துறை, நுகர்வுத்துறை, சமூக நீதி அது ஹிந்துவோ, பௌத்தமோ, இஸ்லாமோ அல்லது கிறிஸ்தவமோ ஆகட்டும் இவைகளில் ஒரு பிரஜை என்ற வகையில் முஸ்லிம்களின் பங்களிப்பு எவ்வாறானது. நாம் முஸ்லிம்களை சிறுபான்மை என்று அல்லாது நாட்டுக்கு சொந்தமானவர்கள் என்ற உணர்வை ஏற்படுத்துவதற்கு உதவ வேண்டும்.
மேலும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பௌத்தர்கள் எமது மக்கள் என்று கூறக்கூடிய வகையில் உங்களது உறுப்பினர்களை மற்றும் சகோதர சகோதரிகளை அறிவுறுத்துதல் வேண்டும். ஆகவே இது தொடர்பில் புரிதலை ஏற்படுத்துவதற்கு முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் நிறுவனகளுக்கு பாரிய பொறுப்பு உள்ளதாகவே நான் நினைகின்றேன்.
05. கேள்வி: ISIS போன்ற வேறுபட்ட கருத்துக்கள் கொண்ட பிரிவினரை நாடி இளைஞர்கள் கவரப்பட்டு வருகின்றமை தற்பொழுது ஒரு புதிய போக்காக உருவெடுத்துள்ளது. இவை தொடர்பாக இலங்கை இளைஞர்களுக்கு நீங்கள் கூறும் செய்தி என்ன?
பதில்: இது ஒரு பாரிய பிரச்சினையாகவே காணப்படுகின்றது. இவ்வாறு கவரப்படும் இளைஞர்களை தடுக்க சில விடயங்களை குறிப்பிடலாம்.
இஸ்லாம் என்பது ஒரு மார்க்கமாகும். ஆனால் பலவகையான விளக்கங்கள் காணப்படுகின்றன. எமது பொறுப்பு என்னவென்றால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் ஏற்றுகொள்ள முடியாதவற்றை வேறுபடுத்தி அடையாளம் கண்டுகொள்வதாகும்.
ஆனால் இஸ்லாமிய அரசு என கூறிக்கொண்டு செயற்படும் ISIS முற்றிலும் இஸ்லாத்தில் கூறப்பட்ட கருத்துக்களுக்கு முரணானதாகும். அவர்கள் ஏனைய முஸ்லிம்களுடன் செயற்படும் விதம் ஏற்றுகொள்ள முடியாது. கொலை செய்தல், துன்புறுத்துதல் மற்றும் மனித மரபுகளை அளித்தல் என்பன எமது மார்க்கம் இல்லை.
06. கேள்வி: இது போன்ற இயக்கங்களுக்கு இளைஞர்கள் கவரப்பட்டு செல்வதன் காரணம் என்ன?
பதில் : ஏன் இளைஞர்கள் இவற்றுக்கு ஈர்க்கப்படுகின்றனர் என்பதை நமக்குள்ளே கேட்க வேண்டும். இரண்டு காரணங்கள் இருக்கின்றன. அதாவது இதனை திரைக்கு பின்னாலிருந்து வழிநடத்துபவர்கள் மிகவும் தொழில் வான்மையனவர்கள். அவர்களது தகவல்களை பரப்புவதில் திறமையானவர்களாக காணப்படுகின்றனர்.
அதே போன்று இளைஞர்களின் உணர்சிகளையும் விரக்தியை சாதகமாக பயன்படுத்துகின்றனர். மேற்கு நாடுகள் செய்யும் செயற்பாடுகளை விமர்சித்து, குறை கூறி, இளைஞர்களை கவர்ந்திழுக்கின்றனர். இது ஒரு அறிவு தொடர்ப்பான பிரச்சினை அல்ல. இது உணர்வு ரீதியான பிரச்சினையாகவே நான் கருதுகின்றேன்.
07. கேள்வி: ISIS பக்கம் இளைஞர்கள் கவரப்பட்டு செல்வதை தடுப்பதற்க்கான விழிமுறைகள் என்ன?
பதில்: இதனை தடுப்பதற்கு முதலில் உண்மையான இஸ்லாத்தை கற்பித்தல் அதனுடன் சேர்த்து இவற்றுக்கு கவரப்படுபவர்களின் விரக்தியையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இஸ்லாம் என்பது சமாதனத்தின் மார்க்கம் என்று வெறுமனே கூறுவது போதுமானதாக இல்லை. இது பிரச்சினையை தீர்க்கபோவதில்லை. ஏனெனில் அனைத்து மட்டங்களிலும் பாரபட்சம் நிலவுகின்றன. இந்த விரக்தியை வைத்தே ISIS பக்கம் இளைஞர்கள் கவரப்பட்டு செல்கின்றனர்.
ஆகவே ISIS பக்கம் கவரப்படும் மக்களின் பிரச்சினைகள் அவர்களது நாட்டிலேயே தீர்வு காணப்பட வேண்டும் என்பதை இஸ்லாமிய நிறுவனகள் போதிக்காத வரை ISIS பக்கம் இளைஞர்கள் படையெடுப்பதை தடுக்க முடியாது.
நன்றி ; நவமணி, Daily Ceylon
![]() |
![]() |
No comments:
Post a Comment