8 வது பாராளுமன்றத்தை
தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி இடம்பெறவுள்ளது. பாராளுமன்றத்தில்
ஆசனங்களை தக்க வைத்துக் கொள்வதற்காக பல அரசியல் கட்சிகளும் சுயேட்சை குழுக்களும்
தயாராகி வருகின்றன. எதிர்வரும் 15ம் திகதி வேட்பு
மனு தாக்கல் செய்யக் கூடிய இருதிதித் திகதியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பல
அரசியல் வாதிகளும் தமது பெயர்களை வேட்பாலாளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ள
முனைப்புடன் ஈடுபட்டுள்ளமையை காணக்கூடியதாக உள்ளது. மதில்களில் ஒட்டப்பட்டுள்ள
சுவரொட்டிகளை அவதானிக்கும் போது இதனை உணந்துகொள்ள முடியும். கடந்த ஜனாதிபதி
தேர்தலை தொடர்ந்து நாட்டில் நல்லாட்சி தொடர்பான கோசங்கள், கோரிக்கைள் சிவில்
சமூக்த்தவர்களால் எழுப்பப்படுகின்ற நிலையில் கட்சிகளும் பழைய அங்கத்தவர்களை
மாத்திரமல்லாமல் பல புதிய அங்கத்தவர்களையும் இணைத்துக்கொள்ள ஆலோசித்து வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.
இதனிடையே
வாக்களர்களை அவதானிக்குமிடத்து தமது வாக்குகளை யாருக்கு வழங்குவது என்று இன்னும்
தீர்மானிக்காத நிலையிலேயே உள்ளனர். தற்போதைய அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ள
நிலையற்ற தன்மையே இதற்கு காரணமாக உள்ளது. ஜனாதிபதி தேர்தலில் தோற்கடிக்கப்பட
முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மீள்வருகை, பல அரசியல் கட்சிகளின் நிலை மாற்றங்கள்,
புதிய கட்சிகளின் வருகை, எதிர்பார்க்கபடும் புதிய கூட்டனிகளின் உருவாக்கம் என்பன
இந்த நிலையற்ற தன்மைக்கு காரணங்களாக அமையலாம்.
கடந்த ஜனாதிபதி
தேர்தலில் முக்கிய தொனியாக பேசப்பட்ட நல்லாட்சி, ஊழலற்ற நிர்வாகம், ஊடக
சுதந்திரம், குடும்ப ஆட்சி, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் இனவாத்துக்கெதிரான
பிரசாரம் என்பன இந்த பொது தேர்தலிலும் முக்கிய இடம்பிடிக்கின்றமையை அவதானிக்க கூடியதாகவுள்ளது.
இதன்
பிரதிபலன்களாக நல்லாட்சியை ஏற்படுத்தும் நோக்கில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்,
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், தொழில் சங்க செயற்பாட்டாளர்கள்,
தொழில்வான்மையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் செயற்திட்டங்கள் அமைந்திருப்பதனை
அவதானிக்க முடிகிறது. இதன் ஒரு வடிவமே கடந்த மார்ச் 12 ம் திகதி அணைத்து கட்சி தலைமைகளும் கைச்சாத்திட்டு
அங்கீகரித்த மார்ச் 12 பிரகடனம். இதில் சமூக
மட்டத்தில் கருத்து மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய விதத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 8 அடிப்படைகளை கொண்டு இது தயாரிக்கப்பட்டுள்ளது.
ஜனநாயகம் மற்றும் நல்லாட்சியை ஏற்படுத்தும் நோக்கில் வேட்பு மனு வழங்கும் போது
கருத்தில் கொள்ள வேண்டிய 8 விடயங்கள்
ஆராயப்படுகின்றது. அவையாவன,
1. குற்றச் செயல்களுக்காக
சிறைத் தண்டனைக்குட்படாதவராக இருத்தல்.
2. இலஞ்ச ஊழல்
தொடர்பான குற்றவாளியாக அன்றி சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்படவராக இருத்தல்.
3. மதுசாரம், போதைபொருள்,
சூதாட்டம், கெசினோ போன்ற சமூக விரோத வியாபாரங்களில் ஈடுபடாதவராக காணப்படல்.
4. உயிரியல் அமைப்பை
பாதிக்கக் கூடிய அல்லது சுழலை பாதிக்கக் கூடிய வகையிலான தொழிலில் ஈடுபடாதவர்க
இருத்தல்.
5. அரசியல் அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்யாதவராக
காணப்படுதல்.
6. மக்கள் பிரதிநிதியாவதர்க்கு
முன்னும் அதன் பின்னரும் நாட்டை
பாதிக்கும் வகையில் நிதி உடன்படிக்கைகளில் ஈடுபடாதவராக இருத்தல்.
7. வேட்பு மனு வழங்கப்படும்
நபர் அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேசத்தை சேர்ந்தவராக இருத்தல் அல்லது அப்
பிரதேச மக்களுடன் நெருங்கிய தொடர்புடையவராக இருத்தல்.
8. வேட்பு மனு வழங்கும்
போது பெண்கள் மற்றும் இளம் வேட்பாளர்களுக்கு போதுமான சந்தர்பங்களை வழங்குதல்.
மேற்கூறப்பட்ட
விடயங்கள் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முன்னிலை அரசியல் கட்சிகள், மத தலைவர்கள்
அங்கீகரித்து கையொப்பமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன் ஒரு அங்கமாக
கடந்த 5ம் திகதி தொடக்கம் நாட்டின் பல பாகங்களிலும்
மக்களை விளிப்பூட்டி 10 இலட்சம் கையெழுத்து
பெரும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனை ஒரு மக்கள் மனுவாக அரசியல் கட்சி
தலைவர்களுக்கு இக் காரணிகளை அங்கீகரிக்குமாறு
அழுத்தம் கொடுக்கும் வகையிலான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஆகவே
மேற்கூறப்பட்ட காரணிகளை தற்போதைய அரசியல் கட்சி தலைவர்கள் புறக்கணிக்க முடியாத
நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த
பிரகடனத்தில் குற்றச்செயல்கள், துஸ்பிரயோகங்கள்,
மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு
வேட்புமனு வழங்க வேண்டாம் என்பதே பிரதான குரலாக காணப்படுகின்றது. இது இவ்வாறிருக்க
கடந்த பாராளுமன்றத்தில் இவ்வாறானவர்கள் கணிசமான அளவு காணப்பட்டாலும்,
குற்றச்சாட்டுக்களை நிறுபிப்பது அவ்வளவு இயலுமான ஒரு விடயமல்ல. இதனால்
இவ்வாரானவர்கள் மீண்டும் போட்டியிட வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றது. ஆனாலும்
அரசியல் கட்சிகள் இந்த காரணிகளுக்கு எவ்வாறு கரிசனை செலுத்தப் போகின்றது என்பது
கேள்விக்குரியது. ஆனால் சமூக மட்டத்தில் அந்தந்த நபர்கள் தொடர்பான மதிப்பீடுகள்
காணப்படுகின்றன. இவற்றை வைத்து அவர்கள் தொடர்பாக வாக்காளர்களுக்கு தீர்மானம்
எடுக்க முடியும். தமது வாக்குகளை பயன்படுத்துவதன் மூலம் இது போன்ற அரசியல்
கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கக் கூடிய சக்தி பொது மக்களிடையே
காணப்படுகின்றது. ஆகவே அரசியல் கட்சிகள் மார்ச் 12 பிரகடனத்தை கண்டுகொள்ளாது விட்டாலும்
வாக்காளர்களுக்கு அவர்கள் தெரிவு செய்யும் வேட்பாளர்களை இந்த அடிப்படைகளின் கீழ்
தெரிவு செய்யலாம். இதன் மூலம் தமது வாக்குகளுக்கு பெறுமதி சேர்த்துக்
கொள்ளலாம்.
ஜனநாயகத்தை
பாதுகாப்போம்
மார்ச் 12 பிரகடனத்தின் அடிப்படையில் வேட்பாளர்களை
தெரிவு செய்யும் சந்தர்ப்பத்தை கட்சி உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டும். இதன்
மூலம் கட்சியின் உள்ளக ஜனநாயகம் பாதுக்கப் படுகின்றது. அனால் தற்போது இது கட்சி
தலைவர், தவிசாளர் அல்லது தலைமைதுவ சபை மூலமே நடைபெருகின்றது. அனால் இந்த
சந்தர்ப்பம் கட்சி உறுப்பினர்களுக்கு வளங்கப்பட்டால் பிரதேசத்தில் சிறந்த
பிரதிநிதியை அவர்கள் தெரிவு செய்வார்கள். பெரும்பாலான அரசியல்வாதிகளுக்கு தேர்தல்
காலங்களில் மாத்திரமே வாக்காளர்கள் ஜாபகம் வருகின்றன. தேர்தல் நெருங்கும் போது
தமது பெயர்களில் உருவாக்கப்பட்ட சங்கங்கள் ஊடாக வாரி வழங்குகின்றனர். இந்த நிதி
எங்கிருந்து வந்தது என்பதை கட்சிகளோ அல்லது வேறு எந்த தரப்பினரோ
கேள்விக்குட்படுத்துவதில்லை. தேர்தல் காலங்களில் பொருட்கள் பகிர்வது அல்லது மத
ஸ்தானங்களுக்கு நிதி வழங்குவது சுலபமாக காணக்கூடியதாக உள்ளது. இலஞ்சம் வழங்குவது
சட்டவிரோதமானது என்றால் இவ்வாறு வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக பொருட்கள்
பகிர்வதும் இலஞ்சம் தான். சட்ட விரோதம் தான். இந்த நிதி வரி செலுத்துகின்ற பொது
மகளின் நிதியாகவே காணப்படுகின்றது. இவர்கள் அரசியலுக்கு வரும் போது காணப்பட்ட
சொத்து விபரங்களையும் தற்போதுள்ள சொத்து விபரங்களையும் ஒப்பிட்டு பார்ப்பதன் மூலம்
அதனை அறிந்து கொள்ளலாம். அன்று அரசியல்வாதிகள் ஒய்வு பெரும் போது சாதாரண மனிதர்
போன்றே ஓய்வு பெற்று சென்றனர். அனால் தற்போதுள்ள எத்தனை அரசியல்வாதிகளுக்கு
தம்மிடமுள்ள சொத்துக்கள் பொது மக்களின் சொத்துக்கள் இல்லை என்பதை கூறமுடியும்?
இது போன்ற அரசியல் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வாக்காளர்கள்
முன்வரவேண்டும். இதன் மூலம் ஜனநாயகத்தை
பாதுகாக்க வேண்டும்.
ஜனநாயகம் அழிவின்
விளிம்பு வரை சென்றுள்ளமையே இவ்வாறான சமூக சக்திகள் எழுவதற்கான காரணம். அனால்
தற்போது கடந்த காலத்தை திட்டித் தீர்ப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. அகவே புதிய
சட்டங்கள் உருவாக்கப்பட்டு ஜனநாயக உலகுக்கு பொருத்தமான வகையில் அரசியல் பயன்பாட்டை
மாற்ற வேண்டும். இதற்கான சந்தர்ப்பமாக இந்த பொதுத் தேர்தலை பயன்படுத்த வேண்டும். உங்கள்
வாக்குகளுக்கு பெறுமதி சேர்ப்பதன் மூலமே இதனை அடைய முடியும். எமது வாக்குகளை புத்திசாதுர்யமாக
பயன்படுத்த வேண்டும். பொருத்தமானவர்களையே பாராளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும். ஒரு
நோய் ஏற்பட்டால் நாம் பொருத்தமான வைத்தியரை நாடுகின்றோம். ஒரு வீடு கட்டுவதற்கு
ஒரு கட்டிட கலைஞரை அணுகுகின்றோம், ஆனால் சட்டவாக்கம் என்று வரும் போது அதற்கு
முற்றாக பொருத்மற்றவர்களையே பாராளுமன்றத்துக்கு அனுப்புகின்றோம். இந்த நிலை
மாறவேண்டும். வாக்களிக்கும் முன்னர் உங்கள் தெரிவு சரியானதா என சிந்தித்து
பாருங்கள். நீங்கள் எந்த கட்சிக்கு வாக்களித்தாலும் சட்டவாக்கத்துக்கு
தகுதியானவர்களையே பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யுங்கள். இதன் மூலம் ஆரோக்கியமான அரசியளமைப்பொன்றுக்கு
மக்கள் பிரத்திநிதிகளை தெரிவு செய்வதில் பங்காளராகுவோம்.
நன்றி; நவமணி 10-12/07/2015
No comments:
Post a Comment