Trending Topic

We bring you Articles, Poems, Stories, Inspirational Quotes and Speeches
Showing posts with label Technology. Show all posts
Showing posts with label Technology. Show all posts

Monday, October 14, 2024

இணையப் பாதுகாப்பு விழிப்புணர்வின் முக்கியத்துவத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் இணைய மோசடிகள்


இணையத்தளம் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 120 சீனப் பிரஜைகள் அடங்கிய குழுவொன்றைக் கடந்த வார இறுதியில் பொலிஸார் கைது செய்தனர். கண்டி, குண்டசாலையில் அமைந்துள்ள 47 அறைகள் கொண்ட சொகுசு பங்களா ஒன்றை சந்தேக நபர்கள் இந்த இணைய மோசடிக்குப் பயன்படுத்தியுள்ளனர். கைது செய்யப்பட்ட சீனப் பிரஜைகளிடம் இருந்த 15 கணினிகள் மற்றும் 300 கைடயக்கத் தொலைபேசிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன. இவ்வாறு இந்த வார ஆரம்பத்தில் ஹங்வெல்ல, நாவல, மற்றும் பாணந்துறை ஆகிய பகுதிகளிலிருந்து சுமார் 80 வெளிநாட்டுப் பிரஜைகள் இணைய மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதே போன்று இதற்கு முன்னரும் நீர்கொழுப்பு

Monday, September 2, 2024

நேர்காணல்: இணையப் பாதுகாப்பு ஏன் அவசியம்?

தொழில்நுட்ப வளர்ச்சியினால் இன்றைய உலகில் இணையத்தின் ஆதிக்கமே வியாபித்துக் காணப்படுகின்றது. இணையத்தின் ஊடாக பல நன்மையான விடயங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் கூட, அதே அளவிற்கு தீமையான விடயங்களை மேற்கொள்வதற்கும் இணையம் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்றது. வேலைவாய்ப்புக்கள், கல்வி, தொலைதொடர்பு, தகவல் பரிமாற்றம், பொழுதுபோக்கு, வணிகம் என்று அன்றாடத் தேவைகள் இன்று இணையத்திலேயே தங்கியுள்ளன. அதனால், இணையப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு வழங்க வேண்டியதன் தேவை காணப்படுகின்றது. 

எனவே, காலத்தின் தேவைக்கு இந்த விடயங்களை வாசகர்களுக்குத் தெளிவுபடுத்தும் நோக்கில் இலங்கைப் பாராளுமன்றத்தில் ஊடக அதிகாரியாகக் கடமையாற்றும் நுஸ்கி முக்தார் அவர்களை நேர்காணல் செய்தோம். அதனை கேள்வி பதிலாக தருகின்றோம்.

Thursday, August 15, 2024

உங்கள் வாக்கைத் தீர்மானிக்கும் சமூக ஊடகப் பிரச்சார உத்திகள் மற்றும் கட்டமைப்பு பற்றிய புரிதல் தேவை

இலங்கையின் அடுத்த ஐந்து ஆண்டுகளை ஆளப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி எதிர்வரும் செப்டம்பர் 21 என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையில் இன்று 15 ஆம் திகதி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படுவதற்கு பல மாதங்களுக்கு முன்பிருந்தே வேட்பாளர்கள் தமது பிரச்சார நடவடிக்கைகளை முடக்கி விட்டிருந்தனர். இதில் குறிப்பாக சமூக ஊடகங்களின் மூலம் மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்கள் முக்கிய இடத்தை பிடிக்கின்றது. இலங்கையின் சனத்தொகையில் 50% அதிகமானவர்கள் இணையத்தளத்தை பயன்படுத்துவதை தரவுகள் மூலம் காணக்கூடியதாக உள்ளது. அதிலும் விஷேடமாக 34.2 வீதமானவர்கள் சமூக ஊடக பயனர்களாக உள்ளதாக இவ்வருட ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. அந்த அடிப்படையில் சமூக ஊடகங்களின் பயனர்களை இலக்காகக் கொண்ட தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றமை காணக்கூடியதாக உள்ளது. 

Thursday, July 11, 2024

அதிகரிக்கும் இணையவழி மோசடிகள் - அவதானம் தேவை


குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தின் நிதி விசாரணைப் பிரிவுக்கு பெண் ஒருவர் அண்மையில் முறைப்பாடொன்றை மேற்கொண்டிருந்தார். அது அறிமுகமில்லாத நபர் ஒருவர் தன்னை வட்ஸப் குழுவொன்றில் இணைத்து, டிக்டொக் வீடியோக்களுக்கு லைக் மற்றும் கமெண்ட் போடுவதன் மூலம் பணம் ஈட்ட முடியும் எனத் தெரிவித்து, பின்னர் அதனை விட அதிக பணம் ஈட்டுவதற்கு முடியும் எனத் தெரிவித்து வங்கிக் கணக்கொன்றுக்கு பணம் வைப்பிலிட்ட சம்பவம் தொடர்பானதாகும். அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையை அடுத்து தந்தையும் மகனொருவரும் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவர்களும் குறித்த நிதி மோசடியில் சிக்கிக்கொண்டு பாதிக்கப்பட்டவர்கள் என்பது மேலதிக விசாரணைகளில் தெரியவந்தது. அதன்படி, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு 200 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் இலங்கையர்களும் வெளிநாட்டவர்களும் உள்ளடங்குகின்றனர். அத்துடன்,

Friday, December 21, 2018

சமூக ஊடகங்கள் வரமா? சாபமா?

சமூக ஊடகங்களின் வருகையானது உலகளாவிய தகவல் பரிமாற்றத்தில் பாரிய மாற்றங்களை கொண்டுவந்ததுடன் தகவல் பரிமாற்ற பொறிமுறையை இலகுபடுத்தியுள்ளது. குறிப்பாக பேஸ்புக், வாட்சப் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்கள் இந்த தகவல் பரிமாற்றத்தில் முக்கிய இடம்பிடிகின்றன. பாரம்பரிய ஊடகங்களும் கூட தற்பொழுது நவீன ஊடகங்களில் தமது கணக்குகளை / பக்கங்களை ஆரம்பித்து அவற்றின் ஊடாக தமது வழமையான வாசகர்களை விட அதிகமான மற்றும் வேறுபட்ட ஒரு தரப்பினருக்கு தமது வெளியீடுகளை சென்றடைய செய்கின்றன.

Wednesday, October 29, 2014

Facebook Launches App to Provide Free Data Acces

Facebook just launched the Internet.org app in Tanzania, providing free data access to a set of basic internet services.

Now everyone in Tanzania can now use the internet for free to find jobs, access health resources and use services like Facebook and BBC News to stay connected and informed.

Facebook plans to introduced the Internet.org app in Zambia this summer. The impact Facebook has seen is inspiring. An expectant mother using the internet to prepare for her pregnancy. A student using Wikipedia to study for her exams. A man living far from the library being able to download books online.

"When people are connected, we can achieve extraordinary things". Mark Zuckerberg written in his Facebook profile announcing the launch of the app. Mark Zuckerberg sees this is another small step on the path to connecting the world and making the opportunities of the internet available to everyone.

More: newsroom