Trending Topic

We bring you Articles, Poems, Stories, Inspirational Quotes and Speeches

Saturday, March 28, 2020

COVID 19 இனால் ஏற்படக்கூடிய உளவியல்சார் சவால்கள்

COVID 19 என்றால் என்ன?  

COVID 19 என அழைக்கப்படும் ஒரு வகையான வைரஸ் நோயை கண்டு உலகமே அதிர்ந்து போயுள்ளது. உயிரைக் கொள்ளும் இந்த கொரோனா தொற்று நோய் 2019 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவிலிருந்து ஆரம்பித்து இன்று சுமார் 180 ற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. இன்றைய நாள் (26.03.2020) புள்ளிவிபரங்களின் படி உலகம் பூராகவும் இந்நோயினால் 462, 684 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் அத்துடன் 20, 834 இற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர் (உலக சுகாதார நிறுவனம்). இந்நிலைமை மேலும் மோசமடையக் கூடும் என சில கணிப்புகளும் எதிர்வுகூறல்களும் குறிப்பிடுகின்றன. இந்நோயின் தீவிரத்தையும் அது உலகளாவியரீதியல் மிக விரைவாகப் பரவுவதையும் கண்ட உலக நாடுகள் தமது நாடுகளில் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தி மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி வருகின்றன. ஏனெனில் இந்நோய்கான தடுப்பு மருந்துகள் இது வரையில் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆகவே வரும் முன் காப்பதே இதற்கான சிறந்தவொரு கட்டுப்பாட்டு வழிமுறை என அண்மைய அனுபவங்கள் தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றன.

Friday, March 13, 2020

பாராளுமன்றத்தின் பணிகளை செய்யக்கூடிய சரியான மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வோம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைப்படி, பாராளுமன்றத்தை கலைக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி செயலாளர் பி.பீ. ஜயசுந்தரவின் கையொப்பத்துடன் கடந்த 02 ஆம் திகதி வெளியானது. 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கி 2015 செப்டம்பர் மாதம் 01 ஆம் திகதி ஆரம்பமான 08 வது பாராளுமன்றத்தின் ஐந்து வருட கால எல்லை இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடையவிருந்தது.
எனினும் 19 வது அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்கு அமைய பாராளுமன்றம் கூடி நான்கரை வருடங்களின் பின்னர் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய 09 வது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களை தெரிவுசெய்யும் பொதுத்தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதற்கான வேட்புமனுக்களை மார்ச் மாதம் 12 ஆம் திகதியிலிருந்து 19 ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை தாக்கல் செய்ய முடியும். அதன்படி புதிய பாராளுமன்றம் மே மாதம் 14 ஆம் திகதி கூடவுள்ளது.

Thursday, July 4, 2019

அபிவிருத்தியின் உச்சகட்டத்துக்கு பிரவேசிக்கும் தல்கஸ்பிட்டிய முஸ்லிம் மகாவித்தியாலயம்

2016ஆம் ஆண்டு அயல் பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்தை அறிமுகப்படுத்திய போது இந்த வாய்ப்பினைப் பெறுவதற்கு மாவனல்லைப் பிரதேசத்தில் பல பாடசாலைகள் போட்டியிட்டன. தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினரது சிபாரிசிலே பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டன. தமது கிராமங்களிலுள்ள பாடசாலையை இத் திட்டத்துக்குள் உள்வாங்குவதற்கு நிலவிய பலத்த போட்டிக்கு மத்தியிலே நெடுஞ்சாலை வீதிப் போக்குவரத்து பெற்றோலிய வள அமைச்சர் கபீர் ஹாசிம் தல்கஸ்பிட்டிய முஸ்லிம் மகாவித்தியாலயத்தை இத்திட்டத்தில் உள்வாங்குவதற்கு சிபாரிசு செய்தார். இதன் காரணமாக இப்பாடசாலை அபிவிருத்திக்கு கல்வி அமைச்சு கோடி ரூபாவைச் செலவு செய்யவுள்ளது. இதில் 3 கோடி ரூபாய்ச் செலவு செய்து நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடிக் கட்டடத்தை அமைச்சர் இன்று வியாழக்கிழமை (04) திறந்து வைக்கிறார்.

Saturday, May 11, 2019

சுகாதாரமற்ற உணவகங்கள் ; விழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் தவிக்கும் தூர பிரதேச பிரயாணிகள்!


அண்மையில் ஒரு பொலிஸ் அதிகாரியும் அவரது மனைவியும் மதவாச்சி நோக்கி பிரயாணத்தை மேற்கொண்டனர். மிரிஹானை பொலிஸ் பணிபுரியும் குறித்த பொலிஸ் அதிகாரி காணி பிரச்சினை ஒன்று தொடர்பிலேயே மதவாச்சி நோக்கி பயணம் மேற்கொண்டிருந்தார். பயணக் களைப்பு நீங்க இருவரும் மன்னார்  வீதியிலுள்ள உணவகமொன்றுக்குள் நுழைந்துள்ளனர். அங்கு சென்ற அவர்கள் உணவுக்காக மரக்கறி ரொட்டியை கோரியுள்ளனர். அவர்கள் உட்கொண்ட மரக்கறி ரொட்டியில் மணல் காணப்பட்டுள்ளது. இதனை அடுத்து குறித்த பொலிஸ் அதிகாரி உடனானடியாக பொது சுகாதார பரிசோதகருக்கு முறைப்பாடு செய்துள்ளார். இது பற்றி கோபமடைந்த உணவக உரிமையாளர் தனது கையாட்களுடன் இணைந்து பொலிஸ் அதிகரிக்கும் அவரது மனைவிக்கும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

Friday, April 12, 2019

VIDEO: அபாயத்தின் விளிம்பில் தெஹிவளை - கல்கிஸ்ஸை மீனவ சமூகம்


தலைநகருக்கு மாத்திரம் இரண்டாம் நிலையாக கருதப்படும் சொர்க்கபுரியான ஒரு நகரமாக தெஹிவளை - கல்கிஸ்ஸை பிரதேசத்தை அழைப்பதில் எவ்வித பிழையும் இல்லை. கடற்கரை என்பது சுந்தரமான ஓர் இயற்கை அமைப்பாகும். தெஹிவளை கல்கிஸ்ஸை கடற்கரை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்ந்த அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரு சுற்றுலா வலயமாகும்.  வானுயர்ந்த கட்டிடங்கள், போக்குவரத்துக்கு காலி வீதி மற்றும் புகையிரத பாதை என தெஹிவளை பிரதேசத்தில் வசிப்பவர்கள் அனைத்தையும் சுலபமாக பெற்றுக்கொள்ளும் வகையிலேயே தெஹிவளை - கல்கிஸ்ஸை பிரதேசம் காணப்படுகின்றது.

Sunday, February 17, 2019

ஒரு கல்விச் சூரியனின் அஸ்தமனம் – எம்.எஸ்.ஏ வாஹித் அதிபர்

ஹெம்மாதகமை பிரதேசத்தில் அறிவொளி பரப்பிய மேதை எம்.எஸ்.ஏ வாஹித் அதிபர் காலமானார் (15.02.2019). வாஹித் பிரின்ஸிபல் என்று எல்லோராலும் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் அழைக்கப்பட்ட மாமேதையின் மறைவு மாவனல்லை பிரதேசத்திற்கே பேரிழப்பாகும்.ஒரு கல்விச் சூரியனின் அஸ்த்தமனம் – எம்.எஸ்.ஏ வாஹித் அதிபர்
மர்ஹூம் முஹம்மது ஸாலி உம்மு குல்தூம் தம்பதியனருக்கு அரும் புதல்வராக 1925.12.18 ஆம் திகதி ஹெம்மாதகமை தும்புளுவாவை கிராமத்தில் அவதரித்தார்.