Trending Topic

We bring you Articles, Poems, Stories, Inspirational Quotes and Speeches

Monday, June 15, 2026

A Royal Invitation to the Journey of a Lifetime: My Hajj Experience as a Guest of Saudi Arabia’s King


For every Muslim, performing Hajj is the ultimate dream. It is a journey of deep prayer, peace, and surrender to Almighty Allah. For many years, I held this dream close to my heart, hoping for the day I could finally see the Holy Kaaba with my own eyes.

This year, in 2026, my lifelong dream came true. I was deeply honored to receive an official invitation to participate in the Custodian of the Two Holy Mosques’ Guests Program for Hajj.

Representing Sri Lanka as an official guest, I joined 2,500 pilgrims from 104 countries. This special program, sponsored entirely by the Saudi government, allowed me to complete my Hajj in absolute peace, safety, and comfort.

Thursday, May 7, 2026

இலங்கையைச் சூழ்ந்துள்ள சர்வதேச இணைய மோசடிகள்! நமது பாதுகாப்பு நமது கையில்...

இலங்கையில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி எந்தளவுக்கு முன்னேறியுள்ளதோ, அதே அளவுக்கு இணையம் வழி நிகழும் குற்றச் செயல்களும் மிகவும் நுணுக்கமான முறையில் விரிவடைந்துள்ளன. இதற்குச் சான்றாக, அண்மையில் ராஜகிரிய பகுதியில் வெளிநாட்டு பிரஜைகள் சுமார் 120 பேர் இணைய வழி மோசடியில் ஈடுபடும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதை குறிப்பிடலாம். அத்துடன் தலங்கம பகுதியிலும் சீனப் பிரஜைகளால் நடத்தப்பட்ட பாரிய இணைய மோசடி மையம் ஒன்று பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டு, 37 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் கடந்த வார இறுதியில் பதிவாகியுள்ளது. இவ்வாறான பாரியளவிலான மோசடி நடவடிக்கைகள் இலங்கையை மையமாகக் கொண்டு இடம் பெறுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவை இலங்கை பிரஜைகளை மாத்திரம் இலக்காகக் கொண்டு இயங்கும் தளங்கள் அல்ல, மாறாக இந்த நவீன மோசடி மையங்கள் சர்வதேச ரீதியாகப் பலரை ஏமாற்றுவதைத் தொழிலாகக் கொண்டு இயங்குகின்றன. 

Monday, April 27, 2026

2.5 மில்லியன் டொலர் மோசடியும் நாம் கற்க வேண்டிய பாடங்களும்...

இலங்கையின் நிதித்துறை அண்மையில் ஒரு பாரிய டிஜிட்டல் அதிர்வை எதிர்கொண்டது. அவுஸ்திரேலிய ஏற்றுமதி நிதி முகவர் நிறுவனத்திற்கு (Australian Export Finance Agency) செலுத்தப்பட வேண்டிய 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி, திட்டமிட்ட முறையில் இணையக் கொள்ளையர்களால் திசைதிருப்பப்பட்டுள்ளது. நாட்டின் கடன் மறுசீரமைப்பு மற்றும் பொருளாதார மீட்சி குறித்து சர்வதேச அளவில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வரும் இவ்வேளையில், இச்சம்பவம் நமது 'இறைமை சார்ந்த நம்பகத்தன்மைக்கு' (Sovereign Credibility) விடுக்கப்பட்ட நேரடி சவாலாகும். 

நிதி அமைச்சுக்கும் அவுஸ்திரேலிய அதிகாரிகளுக்கும் இடையிலான மின்னஞ்சல் தொடர்புகளை இடைமறித்த ஹேக்கர்கள், வங்கிக் கணக்கு விபரங்களை மிக நுட்பமாக மாற்றி இந்த கொள்ளையை அரங்கேற்றியுள்ளதாக தற்பொழுது வெளிப்படுத்தப்பட்டுள்ள தவகல்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது.