ஓடி உழைத்தாய்; ஆடித்திரிந்தாய்
ஆணவங் கொண்டாய்
அகிலத்தையே வெல்லப் பார்த்தாய்
அறநெறிகளை மறந்து,
அசிங்கமான வாழ்க்கைக்கு இசைந்தாய்
சதித்திட்டங்களை தீட்டி,
சட்டங்களையே மறந்து விட்டாய்
சமயத்தை தூரமாக்கி,
சாத்தானை நண்பனாக்கி
சாந்தியையே விரட்டியடித்தாய்
கொடுமைகள்! கொடுமைகள்
தாங்க இயலவில்லையே
கொரோனா என்றொரு வைரஸ்
கொந்தளித்து எழுந்து விட்டதே
கண்டம் விட்டுக் கண்டம் பாய்ந்து
கொள்ளை நோயாம் நுண்ணுயிர் நீ!
கோபம் கொண்டு கொடூரமாய்
கொதித்தே எழுந்து விட்டாய்!
கொஞ்சி விளையாடும் பிஞ்சுகளையும்
கோடி கோடியாய் உழைக்கும் கோமகனையும்
கொட்டில்களிலே வாழும் சாதாரண
குடிமகனையும் நீ பிடித்துள்ள பிடி
பலமானதே!
பாடங்கற்றுக் கொள்ள கொரோனா
ஒரு படிப்பினையாம்
படிப்பறிவுள்ள மாந்தனே!
இனியாவது சிந்திக்க இது ஒரு வாய்ப்பு
மமதை பிடித்த மாந்தனே!
மனிதப் புனிதனாய்
இனியாவது இம்மண்ணில் வாழு
ஒரு ஜீவனாவது மிஞ்சுமா? மனிதா!
சிந்தித்து வாழ முனைந்திடு!
- என்.யூ நூருள் ஐன் -
(ஓய்வுபெற்று ஆசிரியை - தல்கஸ்பிடிய, அரனாயக)
நன்றி - விடிவெள்ளி
No comments:
Post a Comment