Space for Meaningful Discussions on Everything from Politics to Technology, Social Issues and Youth
Sunday, April 19, 2020
Saturday, March 28, 2020
COVID 19 இனால் ஏற்படக்கூடிய உளவியல்சார் சவால்கள்
COVID 19 என்றால் என்ன?
COVID 19 என அழைக்கப்படும் ஒரு வகையான வைரஸ் நோயை கண்டு உலகமே அதிர்ந்து போயுள்ளது. உயிரைக் கொள்ளும் இந்த கொரோனா தொற்று நோய் 2019 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவிலிருந்து ஆரம்பித்து இன்று சுமார் 180 ற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. இன்றைய நாள் (26.03.2020) புள்ளிவிபரங்களின் படி உலகம் பூராகவும் இந்நோயினால் 462, 684 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் அத்துடன் 20, 834 இற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர் (உலக சுகாதார நிறுவனம்). இந்நிலைமை மேலும் மோசமடையக் கூடும் என சில கணிப்புகளும் எதிர்வுகூறல்களும் குறிப்பிடுகின்றன. இந்நோயின் தீவிரத்தையும் அது உலகளாவியரீதியல் மிக விரைவாகப் பரவுவதையும் கண்ட உலக நாடுகள் தமது நாடுகளில் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தி மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி வருகின்றன. ஏனெனில் இந்நோய்கான தடுப்பு மருந்துகள் இது வரையில் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆகவே வரும் முன் காப்பதே இதற்கான சிறந்தவொரு கட்டுப்பாட்டு வழிமுறை என அண்மைய அனுபவங்கள் தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றன.

Friday, March 13, 2020
பாராளுமன்றத்தின் பணிகளை செய்யக்கூடிய சரியான மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வோம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைப்படி,
பாராளுமன்றத்தை கலைக்கும் அதிவிசேட வர்த்தமானி
அறிவித்தல் ஜனாதிபதி செயலாளர் பி.பீ. ஜயசுந்தரவின் கையொப்பத்துடன் கடந்த 02 ஆம் திகதி
வெளியானது. 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட
பாராளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கி 2015 செப்டம்பர் மாதம் 01 ஆம் திகதி ஆரம்பமான
08 வது பாராளுமன்றத்தின் ஐந்து வருட கால எல்லை இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடையவிருந்தது.
எனினும் 19 வது அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்கு அமைய பாராளுமன்றம்
கூடி நான்கரை வருடங்களின் பின்னர் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு
வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய 09 வது பாராளுமன்றத்துக்கான
உறுப்பினர்களை தெரிவுசெய்யும் பொதுத்தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இதற்கான வேட்புமனுக்களை மார்ச் மாதம் 12 ஆம் திகதியிலிருந்து 19 ஆம் திகதி நண்பகல்
12 மணிவரை தாக்கல் செய்ய முடியும். அதன்படி புதிய பாராளுமன்றம் மே மாதம் 14 ஆம் திகதி
கூடவுள்ளது.
Subscribe to:
Posts (Atom)