Trending Topic

We bring you Articles, Poems, Stories, Inspirational Quotes and Speeches

Monday, November 2, 2015

Northern Muslims Continue to Rot in Refugee Camps


Ignored by successive governments, their own politicians and international community

by Latheef Farook : 
The unfortunate plight of northern Muslims refugees, abandoned by Muslim politicians, the successive governments and even the international community speak volume for the bankrupt nature of the Island’s Muslim politics and even the community. Muslims were part and parcel of northern soil and society. Over
centuries this was their only place and their Tamil neighbors were the only people they knew. Most of them often felt alien when they visited the island’s south as they found it somewhat uncomfortable there due to the different social environment especially when it came to speaking in Sinhala.
Even around the late 1980s, the bulk of their concentration was in Jaffna city where they lived predominantly in three densely populated areas, namely Sonaka Theru, Ottumadam and Bommaively which were collectively known as Muslim ‘vattaaram’ -zones.
Their main activities were retail and wholesale hardware trade, lorry transport, jewellery and tailoring besides agriculture and fisheries.  They owned houses and properties besides paddy lands and fishery boats.Muslims dominated the trade at one stage to such an extent that two-thirds of the blocks in the new market in Jaffna, built by the Mayor of Jaffna, Alfred Duraiappah, and was monopolized by them. 

Tuesday, September 29, 2015

Oxford பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர், கலாநிதி தாரிக் ரமழானுடன் செவ்வி


01. கேள்வி: பல்லின மக்கள் வாழும் இலங்கையில் சிறுபான்மை சமூகமாக வாழும் முஸ்லிம்கள், பெரும்பான்மை சமூகத்துடன் மற்றைய ஏனைய சமூகங்களுடன் ஒன்றிணைந்து வாழ்வது எப்படி?
பதில்: ஒன்றிணைந்து வாழ்தல் என்ற சொற்பிரயோகத்தில் ஒரு குழப்பநிலை காணப்படுவதாகவே நான் நினைகின்றேன். நீங்கள் அனைவரும் இலங்கையின் பிரஜைகள். இது உங்களுடைய நாடு. மத ரீதியாக சிறுபான்மையினராக இருந்தாலும் இது உங்கள் நாடு. இலங்கை கலாசாரத்திற்குள் வாழும் நீங்கள் இலங்கை முஸ்லிம்கள்.
பரந்த இலங்கைக்குள் ஒன்றிணைத்து வாழ்தல் போன்று கருத்துப்பட எப்பொழுதும் பேசுவதன் மூலம் இது உமது சமூகமில்லை, இது பெரும்பன்மையினரின் சமூகம் மாத்திரம் என்ற உணர்வை எற்படுத்துகின்றது. ஆனால் இந்த சமூகம் அனைவரினதும். அனைவரும் நாட்டின் சமஉரிமை கொண்ட பிரஜைகள். இவ்வாறே இது அமைய வேண்டும் என நான் நினைக்கின்றேன்.
02. கேள்வி: பல்லின சமூகத்தில் வாழும் போது முஸ்லிம்களின் அடையாளத்தை பேணி வாழ்வது சவால்மிக்கது. ஒன்றிணைந்து வாழும் போது எவ்வாறான அடையாளங்களை விட்டுகொடுக்க முடியும் எவ்வாறான அடையாளங்களை விட்டுகொடுக்க முடியாது?
பதில்: நாம் ஒன்றிணைத்து வாழ்தல் மற்றும் எமது அடையாளங்களை பேணுதல் என்ற பத பிரயோகத்தையே சவாலாக கொள்ள வேண்டும். இங்கு முக்கிய விடயம் என்னவென்றால் இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகள் என்ன என்பதனை அறிந்துகொள்ள வேண்டும்.

Tuesday, July 14, 2015

ஆரோக்கியமான அரசியளமைப்பொன்றுக்கு மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வோம்

8 வது பாராளுமன்றத்தை தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி இடம்பெறவுள்ளது. பாராளுமன்றத்தில் ஆசனங்களை தக்க வைத்துக் கொள்வதற்காக பல அரசியல் கட்சிகளும் சுயேட்சை குழுக்களும் தயாராகி வருகின்றன. எதிர்வரும் 15ம் திகதி வேட்பு மனு தாக்கல் செய்யக் கூடிய இருதிதித் திகதியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பல அரசியல் வாதிகளும் தமது பெயர்களை வேட்பாலாளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ள முனைப்புடன் ஈடுபட்டுள்ளமையை காணக்கூடியதாக உள்ளது. மதில்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை அவதானிக்கும் போது இதனை உணந்துகொள்ள முடியும். கடந்த ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து நாட்டில் நல்லாட்சி தொடர்பான கோசங்கள், கோரிக்கைள் சிவில் சமூக்த்தவர்களால் எழுப்பப்படுகின்ற நிலையில் கட்சிகளும் பழைய அங்கத்தவர்களை மாத்திரமல்லாமல் பல புதிய அங்கத்தவர்களையும் இணைத்துக்கொள்ள ஆலோசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே வாக்களர்களை அவதானிக்குமிடத்து தமது வாக்குகளை யாருக்கு வழங்குவது என்று இன்னும் தீர்மானிக்காத நிலையிலேயே உள்ளனர். தற்போதைய அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மையே இதற்கு காரணமாக உள்ளது. ஜனாதிபதி தேர்தலில் தோற்கடிக்கப்பட முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மீள்வருகை, பல அரசியல் கட்சிகளின் நிலை மாற்றங்கள், புதிய கட்சிகளின் வருகை, எதிர்பார்க்கபடும் புதிய கூட்டனிகளின் உருவாக்கம் என்பன இந்த நிலையற்ற தன்மைக்கு காரணங்களாக அமையலாம்.

Sunday, July 5, 2015

Nomination to Mahinda Rajapaksa to contest forthcoming election: Betrayal of good governance and collapse of moral principles

my3-mahinda
By Latheef Farook
So, once again yet another parliamentary election to elect a new government!The question is what the choice available is for the island’s unfortunate voters.Inevitably the only choice is between the two major political parties-United National Party and the Sri Lanka Freedom Party- both of which, with their racist politics, brought the country to today’s shameful state of affairs.
These two parties were solely responsible for dividing communities to promote the majority Sinhalese at the expense of the minorities to either remain in power or capture power.
Sri Lanka with very high literacy, stable economy and communal harmony was a role model for the entire newly emerging Third World countries during the time of independence in 1948. Today, despite all its natural resources, literate  population, long  and rich historic past  and all other advantages, it is one of the most mismanaged countries in the world  known for crime, corruption at all levels,, collapse of rule and law, mismanagement of government institutions ,fast declining moral values and the list continues.

Saturday, April 11, 2015

பணியிட பாதுகாப்பை உணர்த்திய இளைஞனின் பரிதாபகர மரணம்

கடந்த வாரம் (31.03.2015) நடந்த ஒரு மரணம் முழு  உடுநுவரையையே சோகத்தில் மூழ்கடிக்கச் செய்தது. அது தான் கண்ணாடி  களஞ்சிய சாலையில் உள்ள  கண்ணாடி சீட்கள் சரிந்து விழுந்து கழுத்து வெட்டப்பட்டு பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம். தஸ்கரை பகுதியை சேர்ந்த 24 வயது இளைஞன் முஹம்மத் இஸ்பாக் என்பவரே இவ்வாறு மரணித்தவராவார். சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட இச் சம்பவம்  தொடர்பான காணொளி அனைவரையும் அதிர்சிக்குள்ளாக்கியது.

முஹம்மத் இஸ்பாக்
(வயது 24)
கண்டியில் அமைந்துள்ள கண்ணாடி வியாபார நிலையம் ஒன்றில் வேலை செய்யும் இஷ்பாக் தனது சகபணியாளுடன் மஹியாவையில் அமைத்துள்ள கண்ணாடி களஞ்சிய சாலைக்கு கண்ணாடிகளை எடுப்பதற்காக சென்ற போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது. கண்ணாடிகளை எடுக்கும் போது திடீரென இவர்பக்கம் சரிந்த கண்ணாடி சீட்களை தனது  கைகளால் தாங்கியபடி சகபணியாலரை  உதவிக்கு அழைத்து வரும் படி அனுப்பியுள்ளார். ஆனால் உதவிக்கு ஆட்கள்  வரும் போது அனைத்தும் நடந்து முடிந்துவிட்டன. 

பாரம் தாங்காமல் சுமார் 120 கிலோ எடை கொண்ட கண்ணாடிகள் இவர் மீது விழுந்துள்ளன.  இதன் பின்னர் கண்டி மாநகரசபை தீயணைக்கும் பிரிவினர் அழைத்து  வரப்பட்டனர். தீயணைப்புப் படையினர்  சுமார் ஒரு மணித்தியாலத்திக்கும் மேலாக மீட்க  முயற்சித்தும் அது தோல்வியில் முடிந்துள்ளது. இதனிடையே சம்பவ இடத்துக்கு வந்த களஞ்சியசாலை உரிமையாளர் சம்பவத்தை நேரில் பார்த்த அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு கண்டி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு   சிகிச்சை பெற்று வருகிறார்.

வேலைத்தளத்தில் ஏற்படும் அனர்த்தங்களால் உயிரிழப்பு ஏற்பட்ட முதல் சம்பவம் இதுவல்ல. இதற்கு சில மாதங்களுக்கு  முன்பு தெமடகொடை பகுதியில் உயரமான  கட்டிடமொன்றில் நிறப்பூச்சு பூசிக்கொண்டிருந்த இரு இளஞ்சர்கள் கீழே விழுந்து கடும் காயங்களுக்கு உட்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பரிதாப செய்தியை கேள்விப்பட்டிருப்பீர்கள்.

Wednesday, March 25, 2015

நாட்டின் அபிவிருத்தியில் சமூகப் பணிக் கல்வியின் பங்கு இன்றியமையாதது

ஒரு நாட்டின் அபிவிருத்தி வெறுமனே பௌதீக வளங்களின் அவிவிருத்தியால் மாத்திரம் இடம்பெற முடியாது. மாறாக அவிபிருத்தி பூரணப்பட வேண்டுமானால் ஒப்பீட்டடிப்படையில் மனித வளங்களின் அபிவிருத்தியும் ஏற்பட வேண்டும். இவ்வாறான பௌதீக வளம் மற்றும் மனித வளம் உட்பட்ட சமூக அபிவிருத்தியை கொண்டே ஒரு நாட்டின் அபிவிருத்தியை அளவிட முடியும்.
அபிவிருத்தியை இலக்காக கொண்டு எந்தளவு முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டாலும் அதன் பூரண பயனை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அபிவிருத்தி என்பது மக்களின் உண்மையான தேவையாக மாறவேண்டும். மேலும் இடம்பெறும் அபிவிருத்தி திட்டங்கள் மீது அதன் பயனர்களின் மற்றும் நாட்டு மக்களின் நம்பிக்கை ஏற்படவேண்டும். சாதக மனப்பாங்கு ஏற்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் அபிவிருத்தியின் பிரதிபலன்களை மக்களை சென்றடையச் செய்து நாட்டில் சமூக அபிவிருத்தியை ஏற்படுத்த முடியும்.

சமூக அபிவிருத்தியை ஏற்படுத்துவதில் சமூகப்பணியின் பங்களிப்பு மிக அவசியமான ஒன்றாக தற்பொழுது உலகம் பூராகவும் கருதப்படுகின்றது. அபிவிருத்தி அடைந்த நாடுகளை நோக்கும் போது அவற்றின் அபிவிருத்தியில் சமூகப் பணியின் பங்கு முக்கிய இடம்பிடித்திருப்பதை கண்டுகொள்ளக் கூடியதாகவுள்ளது. எமது நாட்டைப் பொருத்தவரையிலும் சமூகப் பணியின் அவசியம் அதிகரித்துச் செல்வதை உணரக்கூடியதாகவுள்ளது.