கடந்த வாரம் (31.03.2015) நடந்த ஒரு மரணம் முழு உடுநுவரையையே
சோகத்தில் மூழ்கடிக்கச் செய்தது. அது தான் கண்ணாடி களஞ்சிய சாலையில் உள்ள கண்ணாடி சீட்கள் சரிந்து விழுந்து கழுத்து
வெட்டப்பட்டு பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம். தஸ்கரை பகுதியை சேர்ந்த 24 வயது
இளைஞன் முஹம்மத் இஸ்பாக் என்பவரே இவ்வாறு மரணித்தவராவார். சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட
இச் சம்பவம் தொடர்பான காணொளி அனைவரையும்
அதிர்சிக்குள்ளாக்கியது.
![]() |
முஹம்மத் இஸ்பாக்
(வயது 24)
|
கண்டியில்
அமைந்துள்ள கண்ணாடி வியாபார நிலையம் ஒன்றில் வேலை செய்யும் இஷ்பாக் தனது
சகபணியாளுடன் மஹியாவையில் அமைத்துள்ள கண்ணாடி களஞ்சிய சாலைக்கு கண்ணாடிகளை
எடுப்பதற்காக சென்ற போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது. கண்ணாடிகளை எடுக்கும் போது
திடீரென இவர்பக்கம் சரிந்த கண்ணாடி சீட்களை தனது
கைகளால் தாங்கியபடி சகபணியாலரை
உதவிக்கு அழைத்து வரும் படி அனுப்பியுள்ளார். ஆனால் உதவிக்கு
ஆட்கள் வரும் போது அனைத்தும் நடந்து
முடிந்துவிட்டன.
பாரம் தாங்காமல் சுமார் 120 கிலோ எடை கொண்ட கண்ணாடிகள் இவர் மீது
விழுந்துள்ளன. இதன் பின்னர் கண்டி
மாநகரசபை தீயணைக்கும் பிரிவினர் அழைத்து
வரப்பட்டனர். தீயணைப்புப் படையினர்
சுமார் ஒரு மணித்தியாலத்திக்கும் மேலாக மீட்க முயற்சித்தும் அது தோல்வியில்
முடிந்துள்ளது. இதனிடையே சம்பவ இடத்துக்கு வந்த களஞ்சியசாலை உரிமையாளர் சம்பவத்தை
நேரில் பார்த்த அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு கண்டி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
வேலைத்தளத்தில்
ஏற்படும் அனர்த்தங்களால் உயிரிழப்பு ஏற்பட்ட முதல் சம்பவம் இதுவல்ல. இதற்கு சில
மாதங்களுக்கு முன்பு தெமடகொடை பகுதியில்
உயரமான கட்டிடமொன்றில் நிறப்பூச்சு
பூசிக்கொண்டிருந்த இரு இளஞ்சர்கள் கீழே விழுந்து கடும் காயங்களுக்கு உட்பட்டு
சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பரிதாப செய்தியை கேள்விப்பட்டிருப்பீர்கள்.
அதுபோல கடந்த வாரம் இடம்பெற்ற இன்னொரு சம்பவம் கட்டுநாயக கைத்தொழில் வளையத்தில்
வெடிபொருள் தயாரிப்பு நிலைத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் காரணமாக தீக்காயங்களுடன்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட இளைஞன் உயிரிழந்ததாக செய்திகள் கூறின. இது போன்ற பல
சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இச் சம்பவங்கள்
தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார வசதிகளை (Occupational Safety and Health ) ஊழியர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதில் உரிமையாளர்களின்
அசமந்தப் போக்கை எடுத்துக் காட்டுகின்றன.
பாதுகாப்பற்ற முறையில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள கண்ணாடிகள் |
இச் சம்பவத்தை எடுத்துப் பார்க்கும் போது, களஞ்சிய சாலையில்
பாதுகாப்பற்ற முறையிலேயே கண்ணாடிகள் களஞ்சியப் படுத்தப்பட்டிருந்தன. அதே போன்று
வேலை செய்யும் ஊழியர்களின் பாதுகாப்பிற்காக அணியக்கூடிய தொப்பியோ கையுறைகளோ
ஊழியர்கள் அணிந்திருக்கவில்லை. இந்த பாதுகாப்பற்ற நிலைமை பொதுவாக இலங்கையில் அணைத்து வேலைத்தளங்களிலும் காணப்படும் சாதாரண விடயமே.
ஊழியர் நலன், தொழில்
பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்ப்பான சட்டங்கள் பணியிட பாதுக்காப்பை (Workplace
Safety) சட்டரீதியாக உறுதி செய்கின்றனவாக இருக்கின்றன. ஆனால் இந்த சட்டதிட்டங்கள் நடைமுறையில் எந்தளவு ஊழியர்களின் பாதுகாப்பை
உறுதி செய்கின்றன என்பது கேள்விக்குறி.
இரசாயன தாக்கம்,
மின் தாக்கம், உயர்ந்த இடங்களிலிருந்து விழுவதன் மூலம்
ஏற்படக்கூடிய அனர்த்தம், இயந்திரங்கள்
மூலம் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள், தீ பற்றுதல்,
கூறிய ஆயுதங்கள் உடலின்
மீது விழுதல் மற்றும் காண்ணாடி விழுதல் போன்ற ஆபத்துக்களை பணியிட அனர்தங்களாக (Workplace
Hazards) குறிப்பிடலாம்.
இவ்வாறன
அனர்த்தங்கள் காரணமாக உயிரிழப்புக்கள், சொத்து சேதங்கள் ஏற்படலாம். கை கால்களை இழப்பதன் மூலம் நிரந்தர அங்கவீன
நிலைக்கு தள்ளப்படலாம். இதன் மூலம் குடும்பங்கள் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்படும்.
இது நாட்டின் பொருளாதாரத்திற்கும் பாரிய இழப்புக்களை ஏற்படுத்தக் கூடியனவாகும்.
இவ்வாறான
அனர்த்தங்களில் இருந்து பாதுகாப்பாக இருப்பதானால் உயர்ந்த இடங்களில் வேலை செய்யும்
போது எப்பொழுதும் பாதுகாப்பு பட்டி (Belt) அணிதல். இரசாயனப் பொருட்களை கையாளும் போது தலைக்கவசம் (safety Helmet),
முகமூடி (Face
Mask), மூக்குக் கண்ணாடி (Eye
Goggles), கையுறை (Gloves) மற்றும் பாதுகாப்பு சப்பாத்து (Safety
Shoes) போன்ற தனி நபர்
பாதுகாப்பு உபரணங்கள் பயன்படுத்துவதன் மூலம் பணியிட அனர்த்தம் மற்றும் நோய்த்
தாக்கங்கலை குறைதுக்கொள்ளலாம்.
இயந்திரங்களை
கையாளும் போது அதனை பரிசோதிப்பதற்காக அனுமதியளிக்கப்பட அதிகாரியொருவரின் ஆலோசனை
மற்றும் வழிகாட்டலின் கீழ்
செயற்படுவதன் மூலம் இயந்திரங்களால் ஏற்படும் அனர்த்தங்களில் இருந்து பாதுகாப்பு
பெற முடியும். மின்சாரம் தொடர்பான வேளைகளில் உரிய பாதுகாப்பு நடைமுறைகளை
பின்பற்றுவதன் மூலம் மின்னனர்தங்களில் இருந்து பாதுகாப்பு பெறலாம்.
தொழில்
வழங்குனரின் கடப்பாடுகள்
- ஊழியர்களுக்கு தேவையான பாதுகாப்பு அங்கிகளை பெற்றுக்கொடுத்தல்.
- பணியிட பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் சம்பந்தமான கருத்தரங்குகள், பயிற்சிகளில் ஊழியர்களை ஈடுபடுத்துதல்.
- ஊழியர்களின் மருத்துவ தகவல்களை ஆவணப்படுத்தி வைத்தல்.
- பாதுகாப்பு தொடர்பான அறிவுறுத்தல்களை பணியிடத்தில் காட்சிப்படுத்துதல்.
- அவசர தொலைபேசி இலக்கங்களை பணியிடத்தில் காட்சிப்படுத்துதல்.
- சிறு தீயணைப்பு உபகரணங்களை பணியிடத்தில் பொருத்தி வைத்தல், அவற்றை பயன்படுத்தும் வழிகாட்டல்களை காட்சிப்படுத்தல்.
- வேலைத்தளத்தில் முதலுதவி வசதிகளை ஏற்படுத்தி வைத்தல்.
- முதலுதவி தொடர்பான பயிற்சிகளை ஊழியர்களுக்கு வழங்குதல்.
- பாதுகாப்பான முறையில் கலஞ்சியசாலைகளை வடிவமைத்தல்.
- அனர்தங்களின் போது பாதுகாப்பான முறையில் வெளியேரக்கூடிய வகையில் குறியீடுகளை காட்சிப்படுத்தல்.
- முடியுமானவரை CCTV கெமரா பொருத்துதல்.
பணியிட
அனர்த்தங்களால் ஏற்படும் உயிர் மற்றும் பொருள் நஷ்டங்களுக்கு நிறுவன உரிமையாளர்களை
மாத்திரம் குறை கூறுவதில் அர்த்தமில்லை. அனர்த்தங்களில் இருந்து பாதுகாப்பாக
பணியாற்றுவது ஊழியர்களினதும் பொறுப்பாகும். அதே போன்று ஊழியர்களுக்கு தேவையான உரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொழில்
வழங்குனரின் கடப்படாகும்.
![]() |
ஊழியர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள்
விற்பனை செய்யும் நிலையம்
|
![]() |
பாதுகாப்பு கவசம் அணிந்து பணியாற்றும்
ஊழியர் ஒருவர்
|
![]() |
பாதுகாப்பான முறையில்
களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள கண்ணாடிகள்
|
பணியிடங்கள்
மற்றும் பணியாட்கள் உயர்ந்த தரத்திலான நடைமுறைகளை பின்பற்றல் வேண்டும்.
பணியிடங்கள் உயர்த்த தரத்தில் வடிவமைக்கபடல் வேண்டும். அந்த மாற்றத்தை சுவீகாரம்
செய்துகொள்ளாத விடத்து இஸ்பாக் போன்ற பல உயிர்களை எமது நாடு இலங்க வேண்டிவரும்.
- நுஸ்கி முக்தார்
நன்றி; நவமணி (2015.04.10-12)
No comments:
Post a Comment