அண்மையில்
ஒரு பொலிஸ் அதிகாரியும் அவரது மனைவியும் மதவாச்சி நோக்கி பிரயாணத்தை மேற்கொண்டனர்.
மிரிஹானை பொலிஸ் பணிபுரியும் குறித்த பொலிஸ் அதிகாரி காணி பிரச்சினை ஒன்று தொடர்பிலேயே
மதவாச்சி நோக்கி பயணம் மேற்கொண்டிருந்தார். பயணக் களைப்பு நீங்க இருவரும் மன்னார் வீதியிலுள்ள உணவகமொன்றுக்குள் நுழைந்துள்ளனர். அங்கு
சென்ற அவர்கள் உணவுக்காக மரக்கறி ரொட்டியை கோரியுள்ளனர். அவர்கள் உட்கொண்ட மரக்கறி
ரொட்டியில் மணல் காணப்பட்டுள்ளது. இதனை அடுத்து குறித்த பொலிஸ் அதிகாரி உடனானடியாக
பொது சுகாதார பரிசோதகருக்கு முறைப்பாடு செய்துள்ளார். இது பற்றி கோபமடைந்த உணவக உரிமையாளர்
தனது கையாட்களுடன் இணைந்து பொலிஸ் அதிகரிக்கும் அவரது மனைவிக்கும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.