
இந் நிகழ்வில் பன்முக ஆளுமை கொண்ட நவமணி பத்திரிகை ஆசிரியரும், முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீ லங்கா மற்றும் முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவருமான என்.எம் அமீன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
தெஹிவளை ஜயசிங்க மண்டபத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (12/09/2017) தெஹிவளை பிரதேச செயலாளர் நளினி பாலசுப்ரமணியம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கொழும்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கரா கலந்து கொண்டதுடன் இலக்கியவாதிகள், பாடசாலை மாணவர்கள், தெஹிவளை பிரதேச மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.