கண்டி உடுநுவரை பிரதர்ஸ் அமைப்பு மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த ஊடக செயலமர்வு ஹந்தஸ்ஸ அல்-மனார் தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
உயர் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கும் சாதரா தர பரீட்சை பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் மாணவர்களுக்குமான இந்த செயலமர்வு, அனுபவம் வாய்ந்த வளவாலர்களால் நடாத்தப்பட்டதுடன் செயலமர்வில் பங்குபற்றிய மாணவ மாணவிகளுக்கு பெறுமதியான சான்றிதல்களும் வழங்கப்பட்டன.
குறித்த செயலமர்வின் இலத்தரனியல் ஊடக பங்காளராக டெய்லி சிலோன் இணையதளமும் அச்சு ஊடக அனுசரணையை நவமணி நாளிதழும் வழங்கியமை குறிப்பிடத்தக்கது. | 19.03.2016
No comments:
Post a Comment