![]() |
01. கேள்வி: பல்லின மக்கள் வாழும் இலங்கையில் சிறுபான்மை சமூகமாக வாழும் முஸ்லிம்கள், பெரும்பான்மை சமூகத்துடன் மற்றைய ஏனைய சமூகங்களுடன் ஒன்றிணைந்து வாழ்வது எப்படி?
பதில்: ஒன்றிணைந்து வாழ்தல் என்ற சொற்பிரயோகத்தில் ஒரு குழப்பநிலை காணப்படுவதாகவே நான் நினைகின்றேன். நீங்கள் அனைவரும் இலங்கையின் பிரஜைகள். இது உங்களுடைய நாடு. மத ரீதியாக சிறுபான்மையினராக இருந்தாலும் இது உங்கள் நாடு. இலங்கை கலாசாரத்திற்குள் வாழும் நீங்கள் இலங்கை முஸ்லிம்கள்.
பரந்த இலங்கைக்குள் ஒன்றிணைத்து வாழ்தல் போன்று கருத்துப்பட எப்பொழுதும் பேசுவதன் மூலம் இது உமது சமூகமில்லை, இது பெரும்பன்மையினரின் சமூகம் மாத்திரம் என்ற உணர்வை எற்படுத்துகின்றது. ஆனால் இந்த சமூகம் அனைவரினதும். அனைவரும் நாட்டின் சமஉரிமை கொண்ட பிரஜைகள். இவ்வாறே இது அமைய வேண்டும் என நான் நினைக்கின்றேன்.
02. கேள்வி: பல்லின சமூகத்தில் வாழும் போது முஸ்லிம்களின் அடையாளத்தை பேணி வாழ்வது சவால்மிக்கது. ஒன்றிணைந்து வாழும் போது எவ்வாறான அடையாளங்களை விட்டுகொடுக்க முடியும் எவ்வாறான அடையாளங்களை விட்டுகொடுக்க முடியாது?
பதில்: நாம் ஒன்றிணைத்து வாழ்தல் மற்றும் எமது அடையாளங்களை பேணுதல் என்ற பத பிரயோகத்தையே சவாலாக கொள்ள வேண்டும். இங்கு முக்கிய விடயம் என்னவென்றால் இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகள் என்ன என்பதனை அறிந்துகொள்ள வேண்டும்.