கடந்த வாரம் (31.03.2015) நடந்த ஒரு மரணம் முழு உடுநுவரையையே
சோகத்தில் மூழ்கடிக்கச் செய்தது. அது தான் கண்ணாடி களஞ்சிய சாலையில் உள்ள கண்ணாடி சீட்கள் சரிந்து விழுந்து கழுத்து
வெட்டப்பட்டு பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம். தஸ்கரை பகுதியை சேர்ந்த 24 வயது
இளைஞன் முஹம்மத் இஸ்பாக் என்பவரே இவ்வாறு மரணித்தவராவார். சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட
இச் சம்பவம் தொடர்பான காணொளி அனைவரையும்
அதிர்சிக்குள்ளாக்கியது.
![]() |
முஹம்மத் இஸ்பாக்
(வயது 24)
|
கண்டியில்
அமைந்துள்ள கண்ணாடி வியாபார நிலையம் ஒன்றில் வேலை செய்யும் இஷ்பாக் தனது
சகபணியாளுடன் மஹியாவையில் அமைத்துள்ள கண்ணாடி களஞ்சிய சாலைக்கு கண்ணாடிகளை
எடுப்பதற்காக சென்ற போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது. கண்ணாடிகளை எடுக்கும் போது
திடீரென இவர்பக்கம் சரிந்த கண்ணாடி சீட்களை தனது
கைகளால் தாங்கியபடி சகபணியாலரை
உதவிக்கு அழைத்து வரும் படி அனுப்பியுள்ளார். ஆனால் உதவிக்கு
ஆட்கள் வரும் போது அனைத்தும் நடந்து
முடிந்துவிட்டன.
பாரம் தாங்காமல் சுமார் 120 கிலோ எடை கொண்ட கண்ணாடிகள் இவர் மீது
விழுந்துள்ளன. இதன் பின்னர் கண்டி
மாநகரசபை தீயணைக்கும் பிரிவினர் அழைத்து
வரப்பட்டனர். தீயணைப்புப் படையினர்
சுமார் ஒரு மணித்தியாலத்திக்கும் மேலாக மீட்க முயற்சித்தும் அது தோல்வியில்
முடிந்துள்ளது. இதனிடையே சம்பவ இடத்துக்கு வந்த களஞ்சியசாலை உரிமையாளர் சம்பவத்தை
நேரில் பார்த்த அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு கண்டி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
வேலைத்தளத்தில்
ஏற்படும் அனர்த்தங்களால் உயிரிழப்பு ஏற்பட்ட முதல் சம்பவம் இதுவல்ல. இதற்கு சில
மாதங்களுக்கு முன்பு தெமடகொடை பகுதியில்
உயரமான கட்டிடமொன்றில் நிறப்பூச்சு
பூசிக்கொண்டிருந்த இரு இளஞ்சர்கள் கீழே விழுந்து கடும் காயங்களுக்கு உட்பட்டு
சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பரிதாப செய்தியை கேள்விப்பட்டிருப்பீர்கள்.