2016ஆம் ஆண்டு அயல் பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்தை அறிமுகப்படுத்திய போது இந்த வாய்ப்பினைப் பெறுவதற்கு மாவனல்லைப் பிரதேசத்தில் பல பாடசாலைகள் போட்டியிட்டன. தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினரது சிபாரிசிலே பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டன. தமது கிராமங்களிலுள்ள பாடசாலையை இத் திட்டத்துக்குள் உள்வாங்குவதற்கு நிலவிய பலத்த போட்டிக்கு மத்தியிலே நெடுஞ்சாலை வீதிப் போக்குவரத்து பெற்றோலிய வள அமைச்சர் கபீர் ஹாசிம் தல்கஸ்பிட்டிய முஸ்லிம் மகாவித்தியாலயத்தை இத்திட்டத்தில் உள்வாங்குவதற்கு சிபாரிசு செய்தார். இதன் காரணமாக இப்பாடசாலை அபிவிருத்திக்கு கல்வி அமைச்சு கோடி ரூபாவைச் செலவு செய்யவுள்ளது. இதில் 3 கோடி ரூபாய்ச் செலவு செய்து நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடிக் கட்டடத்தை அமைச்சர் இன்று வியாழக்கிழமை (04) திறந்து வைக்கிறார்.