கடந்த 28.07.2018 சனியன்று மாலை கிடைத்த விபத்து செய்தியொன்று என்னை அதிரவைத்தது என்று தான் கூற வேண்டும். அது ஹந்தஸ்ஸ அல்-மனார் தேசிய பாடசாலை ஆசிரியை ஷியானா மற்றும் அவரது கணவர் மொஹம்மத் லாபிரின் மரணச்செய்தியாகும். சம்மாந்துறை வளத்தாப்பிட்டி எனும் இடத்தில் இடம்பெற்ற கோர விபத்து இவர்களது உயிரைப் பலியெடுத்தது. மணல் ஏற்றிவந்த கனரக லொறியொன்றுடன் இவர்கள் பயணித்த வேன் நேருக்கு நேர் மோதியதில் இடம்பெற்ற விபத்தில் இருவரும் இவ்வுலகை விட்டு பிரிந்து சென்றனர். விபத்தின் கோர தாண்டவத்தை சமூக வலைத்தளங்களில் வந்த படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் மூலம்கண்டுகொள்ள முடிந்தது. இந்த செய்தியை கேட்டு நான் மட்டுமல்ல முழு அல் மனார் சமூகமுமே கதி கலங்கிப் போயிருந்தன.