8 வது பாராளுமன்றத்தை
தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி இடம்பெறவுள்ளது. பாராளுமன்றத்தில்
ஆசனங்களை தக்க வைத்துக் கொள்வதற்காக பல அரசியல் கட்சிகளும் சுயேட்சை குழுக்களும்
தயாராகி வருகின்றன. எதிர்வரும் 15ம் திகதி வேட்பு
மனு தாக்கல் செய்யக் கூடிய இருதிதித் திகதியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பல
அரசியல் வாதிகளும் தமது பெயர்களை வேட்பாலாளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ள
முனைப்புடன் ஈடுபட்டுள்ளமையை காணக்கூடியதாக உள்ளது. மதில்களில் ஒட்டப்பட்டுள்ள
சுவரொட்டிகளை அவதானிக்கும் போது இதனை உணந்துகொள்ள முடியும். கடந்த ஜனாதிபதி
தேர்தலை தொடர்ந்து நாட்டில் நல்லாட்சி தொடர்பான கோசங்கள், கோரிக்கைள் சிவில்
சமூக்த்தவர்களால் எழுப்பப்படுகின்ற நிலையில் கட்சிகளும் பழைய அங்கத்தவர்களை
மாத்திரமல்லாமல் பல புதிய அங்கத்தவர்களையும் இணைத்துக்கொள்ள ஆலோசித்து வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.
இதனிடையே
வாக்களர்களை அவதானிக்குமிடத்து தமது வாக்குகளை யாருக்கு வழங்குவது என்று இன்னும்
தீர்மானிக்காத நிலையிலேயே உள்ளனர். தற்போதைய அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ள
நிலையற்ற தன்மையே இதற்கு காரணமாக உள்ளது. ஜனாதிபதி தேர்தலில் தோற்கடிக்கப்பட
முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மீள்வருகை, பல அரசியல் கட்சிகளின் நிலை மாற்றங்கள்,
புதிய கட்சிகளின் வருகை, எதிர்பார்க்கபடும் புதிய கூட்டனிகளின் உருவாக்கம் என்பன
இந்த நிலையற்ற தன்மைக்கு காரணங்களாக அமையலாம்.